
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பி சென்ற வாலிபரை மடக்கி பிடித்த காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அத்திமரி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் அவர் போலீசாரை பார்த்ததும் நிற்காமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பி சென்றார்.
இதையடுத்து போலீசார் வாகனத்தில் சிறிது தூரம் துரத்தி சென்று அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த ஜான்ராஜ் மகன் இம்மானுவேல் அங் துல்லா (வயது 32) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிள் ஆவணங்களை அவரிடம் கேட்டனர். அப்போது அவர் சிறப்பு உதவி ஆய்வாளரை அவதூறாகபேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்மானுவேல் அப்துல்லாவை அதிரடியாக கைது செய்தனர், அவர் ஓட்டி வந்து மோட்டார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிபிடத்தக்கது.