
தூத்துக்குடியில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, லெவிஞ்சிபுரம் பகுதியில் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டு விற் பனை செய்ததாக விஜயபாண்டி (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லாட்டரி சீட்டுகள், ரூ.800 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
CATEGORIES மாவட்டம்