தூத்துக்குடி அந்தோணியார் புரம் பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி அந்தோணியார் புரம் பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார் புரம் பகுதியில் மழையில் சேதமான பாலம் பாலத்தில் கனரக லாரி செல்ல முடியாமல் சிக்கித் தவித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள பாலம் கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாடத்தின் மீது அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. இதனால் இந்தப் பாலத்தை விரைவாக சீரமைக்க வேண்டுமென நெடுஞ்சாலை துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு காற்றாடி ஏற்றி சென்ற கனரக கண்டெய்னர் லாரி ஒன்று அந்தப் பாலத்தை கடக்க முயன்றபோது செல்ல முடியாமல் அதில் சிக்கிக்கொண்டது .

இதன் காரணமாக தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அதன் பின்னர் அங்கு போக்குவரத்து சரி செய்யப்பட்டது

அந்தோனியார்புரம் பகுதியில் மழையால் சேதமடைந்து பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த பாலத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )