அரசு குழந்தைகள் காப்பகத்தில் கலவரத்தால் வைக்கப்பட்ட தீ – 35 சிறுமிகள் கருகி சாவு
கவுதமாலா நாட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு தீ வைக்கப்பட்டது. இதில் 35 சிறுமிகள் கருகி உயிரிழந்தனர். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் சான் ஜோஸ் பினுலா நகரில் அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர்களும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 400 பேர் மட்டுமே தங்கும் வசதியுள்ள இந்த காப்பகத்தில் அதை விட மிக அதிக எண்ணிக்கையில் சிறுவர், சிறுமியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கலவரத்தால் வைக்கப்பட்ட தீ இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அங்கு தங்கி இருந்த இளைஞர்கள் திடீர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் காப்பகத்தில் இருந்த மெத்தைகளுக்கு தீ வைத்து விட்டு தப்பியோடிதாக தெரிகிறது. சிதறி ஓடிய சிறுமிகள் இந்த காப்பகம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் பீதியடைந்த சிறுமிகள் நான்கு புறமும் சிதறி ஓடினர். இருப்பினும் அவர்கள் மீதும் தீ பற்றியது. 35 சிறுமிகள் கருகி பலி இதில் 35 சிறுமிகள் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தனர். அவர்கள் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களது உடல்கள் அடையாளம் காண இயலாத வகையில் கரிக்கட்டைகள் ஆகி விட்டன. 50 பேர் படுகாயம் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். சில துடிப்பான குழந்தைகள் உடனடியாக அங்கிருந்து தப்பி, உயிர் பிழைத்தனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 3 நாள் தேசிய துக்கம் அந்த கொடிய சம்பவத்துக்கு அந்த நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 நாள் தேசிய துக்கமும் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கவுதமாலா அரசு உத்தரவிட்டுள்ளது.