
சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற விரும்புவோர் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தகவல்
சுதந்திர தின விழாவின்போது சிறந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால் தகுதியான நபர்கள் 20.06.2024 அன்று மாலை ஐந்து மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலக முகவரியில் உடனடியாக கருத்துரு சமர்ப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது சிறந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தகுதியான நபர்களின் கருத்துருகள் கீழ்கண்ட விதிமுறைகளின் படி பதிவு செய்யப்பட வேண்டும்.
1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்
2. குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் (ம) நிறுவனங்களாக இருத்தல் வேண்டும்.
3. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.
4. இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2024
மேற்கண்ட சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தாங்கள் புரிந்த சாதனைகளை கீழ்கண்டவாறு புத்தக வடிவ கருத்துரு தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
பொருளடக்கம் (ம) பக்க எண் (Index)
இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுய விவரம் (Bio data) மற்றும் Passport Size Photo -2
ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) Soft Copy & Hard Copy
பிற விருதுகள் பெற்றிருப்பின் அதன் விவரம்/ விருதின் பெயர்/ யாரிடமிருந்து
பெறப்பட்டது (ம) பெற்ற வருடம்). கையேட்டில் விருது பெற்ற புகைப்படம்/சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் (ம)
பக்கங்களுக்கு கொடி வைக்கவும் சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்) இணைக்கப்படவேண்டும்
சேவை குறித்த பத்திரிக்கை செய்தி தொகுப்பு
சமூக சேவையாளரின்/நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம் தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை
சமூகப் பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று.
கையேடு தமிழ் (ம) ஆங்கிலம் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பப்படவேண்டும்.
20.06.2024 அன்று மாலை ஐந்து மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி 628101 என்ற அலுவலக முகவரியில் உடனடியாக சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.