
தூத்துக்குடி: தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பினர் கனிமொழி எம்பி-க்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்ற கனிமொழி எம்பி-யை தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பினர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ்பாபு வழிகாட்டுதலின் பேரில் அதன் துணைத் தலைவர் எம். மெய்கண்டன் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி-க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நீங்கள் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறோம். உங்கள் நற்செயலுக்கு வெகுமதி கிடைத்துள்ளது. உங்களுக்கு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என வாழ்த்து தெரிவித்தனர்.
காது கேளாதோர்களுக்கு தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்யும் அதற்கு நான் துணையாக இருப்பேன் என்று கனிமொழி கூறினார்.
நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு காது கேளாதார் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ஆகியோ உடனிருந்தனர்.