திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் புதிய மின் நிலையத்தின் செயல்பாட்டை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் துவக்கி வைத்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் புதிய மின் நிலையத்தின் செயல்பாட்டை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் துவக்கி வைத்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தற்போது ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் ரூ. 200 கோடியிலும், அறநிலையத்துறை சார்பில் ரூ. 100 கோடியிலும் என மொத்தம் ரூ. 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல கோயிலில் கும்பாபிஷேக பணிகளும் ஒருங்கிணைந்து நடந்து வருகிறது. இதன் ஒரு பழைய மின் நிலையத்திற்கு பதிலாக புதிய மின் நிலையம் இடும்பன் கோயில் எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. நவீனமயமாக்கப்பட்ட புதிய மின் நிலையத்தின் பயன்பாட்டிற்காக நேற்று மாலை திறக்கப்பட்டது.

இந்த புதிய மின் நிலையத்தின் செயல்பாட்டினை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் துவங்கி வைத்து, இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கோயில் செயற்பொறியாளர் முருகன், கோயில் மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணதாஸ், ஹெச்.சி.எல். மேலாளர் பிரவீன், அறங்காவலர் குழுத்;தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1250 கேவிஏ மின்சாரம் :

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் இருந்த பழைய மின் நிலையத்தின் வாயிலாக 455 கேவிஏ மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய மின் நிலையத்தின் மூலம் 1250 கேவிஏ மின் தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் 625 கேவிஏ மின் திறன் கொண்ட 2 ஜெனரேட்டர் வசதியும் உள்ளது. தானியங்கி தொழில்நுட்பத்தில் செயல்படும் மின் நிலையத்திலிருந்து தரை வழித்தடம் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )