சிலம்பம் கற்று கொடுப்பதாக கூறி 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த சிலம்பம் ஆசிரியர் உள்பட இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

சிலம்பம் கற்று கொடுப்பதாக கூறி 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த சிலம்பம் ஆசிரியர் உள்பட இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்முறை செய்த வழக்கில் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் மாரிமுத்து (25) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அதேபோன்று கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை சிலம்பம் கற்று கொடுப்பதாக கூறி கடந்த ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் நாலாட்டின்புதூர் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த சிலம்பம் ஆசிரியரான மாரியப்பன் மகன் மாரிக்கண்ணன் (44) என்பவரையும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட எதிரிகளான மாரிமுத்து மற்றும் மாரிக்கண்ணன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் 1) மாரிமுத்து மற்றும் நாலாட்டின்புதூர் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் 2) மாரிக்கண்ணன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிரேமா 2 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )