
கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி இணைந்து பள்ளிமைதானத்தில் 10வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் பள்ளித்தலைவர் மற்றும் செயலர் அய்யனார் ஆகியோர் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர். மேலும் காமராஜர் விருது பெற்ற 12ம் வகுப்பு மாணவி செந்தமிழ் செல்வியை பாராட்டி பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சியில் மெட்ரிக் பள்ளி முதல்வர் மகாலெட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் யோகாகுணா பல்வேறு ஆசனங்களின் பயன்களை பற்றி எடுத்து கூற கவிதா கிருஷ்ணன் மற்றும் ராஜேஸ்வரி மாணவர்கள் முன் பல்வேறு ஆசனங்களை செய்து காட்ட மாணவர்களும் அதன்படி அந்த ஆசனங்களை சிறப்பாக செய்தனர். இறுதியாக 12ம் வகுப்பு மாணவி பவித்ரா நன்றியுரை கூறினார்.
இவ்விழாஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியை சுஜாதா தலைமையில் இருபள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.