
மாணவ, மாணவிகள் அம்பேத்கர் வழியில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு சாதனைகள் படைக்க வேண்டும் – தூத்துக்குடி விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநில திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் ஜோயல் பேச்சு
தூத்துக்குடி அம்பேத்கா் 133வது பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அம்பேத்கர் இளைஞரணி தலைவர் ராமு என்ற ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அம்பேத்கர் இளைஞரணி முத்தரசன், ஸ்டீபன், இசக்கிமுத்து, சிமியோன், சுலைமான், யோவான் பாக்கியராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளையவேந்தன் இளைஞர் இரத்த தான அறக்கட்டளை அமைப்பாளர் சேக்முகமது, வரவேற்புரையாற்றினார்.
நிகழ்வில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்கூல்பேக், பெண்களுக்கு சேலை, அாிசி, இளைஞர்களுக்கு ஹெல்மட், அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பாிசு மழை வௌ்ளக்காலத்தில் பணியாற்றியவர்களுக்கும் பல்வேறு துறைகளில் சாதனை புாிந்தவர்கள் திருநங்கை வக்கீல் உள்பட பலருக்கும் அம்பேத்கா் நினைவு பாிசு வழங்கி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல் பேசுகையில்,
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர்க்கு ஏப்ரல் மாதம் எடுக்க வேண்டிய விழா தேர்தல் நடைமுறை இருந்ததால் தள்ளி வைக்கப்பட்டு இந்த விழா நடைபெறுகிறது. அம்பேத்கர் இயற்றிய சட்ட முன்வடிவுகளையும் அவரது பணிகளையும் முத்தமிழ் அறிஞர் கலைஞா் பல்வேறு நிகழ்வுகளில் அதை சுட்டிக்காட்டி புகழ்மாலை சேர்த்தவர் சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1931ம் ஆண்டு வட்டமேஜை மாநாடு நடைபெற்ற போது அங்கு சென்ற அம்பேத்கர் பல்வேறு புத்தகங்களை படித்து அதை சேகாித்து இந்தியா திரும்பும் போது கப்பலில் அனுப்பி வைத்தார். அதை கடலில் முழ்கியது. பின்பு பாம்பேயில் இருந்து பல்வேறு புத்தகங்களை படித்து அவருக்கு தேவையான 69 ஆயிரம் புத்தகங்களை எடுத்து வந்த அவர் அதை ஓரு பொிய நூலகமாகவே வைத்திருந்தார். இதற்கு முன் அவர் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கும் கல்லூாி படிப்பை தொட்டபின் சட்டப்படிப்பை பயில்வதற்கும் சந்தித்த பாதைகள் கடினமானவைகள் தான் ஆனால் அவர் இயற்றிய சட்டங்கள் தான் இன்று இந்தியாவில் அரசியல் அமைப்பு இயங்கி வருகிறது.
அவர் எப்படி பல புத்தகங்களை படித்து தனது அறிவாற்றலை வளர்த்து கொண்டு இந்திய தேசத்திற்கு அரசியல் அமைப்பை உருவாக்கி கொடுத்து சாதனை புாிந்தாரோ அதே போல் இங்கு அமர்ந்திருக்கின்ற மாணவ மாணவிகளும் அவரது வழியில் புத்தகங்களை அதிகம் படித்து தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு சாதனைகள் புாிய வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
மாநில வாி சரக்கு மற்றும் சேவை வாி அலுவலர் ராஜதுரை, சப்இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளா் வக்கீல் பால்துரை, வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோ, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார், புதுக்கோட்டை இளைஞர் அணி சத்தியராஜ், தொழிலதிபர்கள் பிரேம் ஆதித்தன், தாமோதரன், ஓன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற அமைப்பாளர் பாாி, விடுதலை சிறுத்தை கட்சி வழக்கறிஞர்கள் அர்ஜீன், சார்லஸ், இளையவேந்தன் இளைஞா் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ரூபன், மற்றும் சிவா, தாஸ், தாசன், கார்த்திக், ராஜா, சரவணன், காதர்மைதீன், முத்துக்குமார், ஆரோக்கியதாஸ், ஆசீப், உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பேத்கா் இளைஞர் அணி மதன்செல்வக்குமார், நன்றியுரையாற்றினார்.