
தூத்துக்குடியில் மாசு இல்லாத மாநகரை உருவாக்க அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் – மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்
தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணிபாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும். என்றும் முன்னாள் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பொியசாமியின் 7ம்ஆண்டு நினைவு நாளையொட்டி ஆல்கன் டிரஸ்ட் சார்பில் அண்ணாநகர் 6வது தெரு மேற்கு பகுதியில் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி கூறுகையில் மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் அனைவரும் வீட்டுக்கு ஓரு மரம் கட்டாயம் வளர்க்க வேண்டும் மாநகர பகுதி முழுவதும் மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. 2லட்சம் மரக்கன்றுகள் நடுவது நெகிழி இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்பான்ஸர்கள் மூலம் 5 லட்சம் துணி பை வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டு இரண்டு பணிகளுமே முழு வீச்சில் நடைபெற்று வருகிறது இதற்கு அனைவரும் முழுமையாக ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், கவுன்சிலர் கனகராஜ், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி தலைவர் பிரபாகர், துைண அமைப்பாளர் மகேஸ்வரசிங், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மற்றும் செந்தில், ஜெயபாண்டி, விக்னேஷ், ராஜன், பிரைட், அன்னராஜ், ஆசீா், ஜெயராஜ், முருகன், ஜெயபால், மாரி, முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, மற்றும் வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.