தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சிறுநாடார் குடியிருப்பில் ரா.ம.வீ. நடுநிலைப்பள்ளி கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் பல்வேறு உயர் பதவியில் உள்ளனர். இப்பள்ளியில் பர்வதா தேவி என்ற தலைமை ஆசிரியர் கடந்த 20 வருடங்களாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டிய ஒரு தலைமை ஆசிரியர் ஒழுக்கமற்ற முறையில் நடந்து இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் ஊர் பொதுமக்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )