
தூத்துக்குடி: தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர் நீதி வழங்கக்கோரியும், போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டம்
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டியில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட முருகன் என்ற முகமது அப்துல்லா மற்றும் குடும்பத்தினர் தூத்துக்குடி மக்கள் நலப் பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் தங்களுக்கு நீதி வழங்கக்கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா மேல இழந் தைகுளம் பள்ளிவாசல் தெருவை சார்ந்த முருகன் என்ற முகமது அப்துல்லா, வளையல் வியாபாரம் செய்து இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 14.9.2017 அன்று மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது கேன்சர் இருப்பதாக கூறி அன்றைய தினமே கையில் கொடுத்துள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த அவர் அதன் பின்பு 15/9/2017 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மருத்துவமனையில் கோமதி என்ற மருத்துவரை அணுகி விபரத்தை கேட்டுள்ளனர் அதன் மருத்துவர்கள் கோமதி, ரமேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் இணைந்து ஆலோசனை செய்து பின்னர் அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது அவருக்கு தவறுதலாக மலக்குடலை வெட்டி விட்டனர். இதனால் அவர் பல இன்னல்களுக்கு உட்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளானார். உயிர்போகும் நிலைக்கு சென்றவர். அதன் பின் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று உயிரை காப்பாற்றி மலம் வெளிவருவதற்கு வயிற்றின் வெளி பகுதியில் ஒரு பை பொருத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் புகார் அளித்து விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டது. அதன்பின்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மருத்துவ கவுன்சில் தீர்ப்பும் நீதிமன்ற தீர்ப்பையும் மறைத்து அந்த உத்தரவுகள் மீது இன்று வரை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அரசு மருத்துவராக ரமேஷ் என்பவரும், பாலகிருஷ்ணன் என்பவரும், இந்த இரு உத்தரவுகளை மறைத்து அரசு பணி செய்து கொண்டிருப்பதால் தண்டனைக்கோரி முருகன் பலமுறை மருத்துவ உயரதிகாரிகளுக்கு புகார் அளித்தும் அது விசாரணைக்கு வந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அப்போதைய மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் அவர்களிடம் அதிகாரிகள் கேட்டதற்கு உண்மைக்கு மாறான பொய் தகவலை சொல்லி குற்றவாளிக்கு உடந்தையாக செயல்பட்ட உத்தரவுகளை இன்று வரை நீர்த்துப் போகச் செய்தது.
எனவே, மீண்டும் தனக்கு நீதி கிடைக்க வேண்டி அறுவை சிகிச்சை செய்து எம்.டி படிக்காமலேயே எம்.டி.என் டாக்டர் என பட்டம் போட்டுக் கொண்ட மயக்கம் மருத்துவர் பாலகிருஷ்ணன், மருத்துவர் ரமேஷ் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் கமலவாசன் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலி மருத்துவர் உட்பட 4 பேருக்கு உரிய தண்டனை கொடுத்து அதை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், போலி மருத்துவர் பாலகிருஷ்ணன் தற்போது கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளராகவும், மருத்துவர் ரமேஷ் விளாத்திகுளத்திலும் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த மருத்துவ துறையின் மாண்பை காக்க போலீசார் அரசு அனுமதி பெறாமல் போலியாக ஆபரேஷன் தியேட்டர் நடத்துவதால் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உயிர் பயத்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று போலி ஆபரேஷன் மூலம் கொன்று பணம் பறித்து வரும் போலிஸ் மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், ரமேஷ் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கமலவாசன் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என தூத்துக்குடி இயக்குனர் நலப்பணி அலுவலகம் முன்பு அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இணை இயக்குனர் விஜயாவிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.