
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், அதன் முழு பரிணாமங்களை வெளிக்கொணரவும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும், ஆட்சியாளர்கள் பதவி விலகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக 25.06.2024 (செவ்வாய்க்கிழமை) தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) வழக்கறிஞர் ரமேஷ்குமார் தலைமையில், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ரமேஷ் முன்னிலையில், புதிய தமிழகம் கட்சியினர் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவி விலககோரியும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குபேந்திரபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஜெகன், மாவட்ட துணை செயலாளர் லட்சுமண பாண்டி, மாநில தொகுதி அமைப்பாளர் அசோக்குமார் உட்பட புதிய தமிழகம் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.