
திமுக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி கிடையாது, சாராய மாடல் ஆட்சி – தூத்துக்குடியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி கிடையாது சாராய மாடல் ஆட்சி கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவத்தை திமுக அரசு மூடி மறைக்க பார்க்கிறது இது சாவு கிடையாது திமுக அரசால் நடத்தப்பட்ட கொலை சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது, இதில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி கிடையாது. இது சாராய மாடல் ஆட்சி. இந்த சம்பவத்தை திமுக அரசு மூடி மறைக்க பார்க்கிறது. இந்த சம்பவம் திமுக அரசால் நடத்தப்பட்ட கொலையாகும். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது என்றார்
மேலும், தமிழக முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த அரசோஃ காவல்துறையோ தயாராக இல்லை. எனவே, பொதுமக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளை தாங்கள் கண்காணித்து பாதுகாக்க அவர்கள் முன்வர வேண்டும் என்றார்.
இந்த ஆட்சியில் அரசிற்கும், அதிகாரிகளுக்கும் நீண்ட இடைவெளி உள்ளது என்ற அவர் தற்போது பல்வேறு பகுதிகளில் சோதனை என்ற பெயரில் சாராயங்கள் பிடிக்கப்படுகின்றன. ஒரு பெரிய நிறுவனம் போல தமிழகத்தில் செயல்பட்டு வந்துள்ளது. இதில் கிடைத்த பணத்தின் மூலம் ஆளுங்கட்சியினர் தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர் என அவர் குற்றம் சாட்டினார்.