
கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி கிராமத்தில் ஸ்ரீ மாலைக்கார போத்தி சாமி திருக்கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோவிலை அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். அரசு சார்பில் இந்த கோவிலுக்கு என்று 4 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சில தனி நபர்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி உள்ளது மட்டுமின்றி, பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு தொடர்ந்து இடையூறு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
இந்நிலையில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து முறையாக அளவீடு செய்து,, ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு தர வலியுறுத்திம் , கோவில் வழிபாட்டை தடுக்கும் நபர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இனாம் மணியாச்சி கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டடு , காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு
இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் நிஷாந்தினி, வட்டாட்சியர் சரவணப் பெருமாள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த மாதம் 10ந்தேதி முறையாக அளவிடு செய்து, ஆக்கிரப்புகள் இருந்தால் அகற்றப்படும் என்று உறுதி அடைத்து தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.