தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது – அதிமுக கவுன்சிலர் பகிரங்க குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அதில் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலரும், மாநகராட்சி மாநகராட்சி கொறடாவுமான வழக்கறிஞர்மூர்த்தி, கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போதைப்பொருள் அதிகரிப்பு போன்ற சம்பவங்களை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளி நடப்பு செய்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது,
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. கடந்த வாரம் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் தூத்துக்குடி இனிகோ நகரில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் சரளமாக கிடைக்கிறது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதால் அதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை மாவட்ட காவல்துறை எடுக்கவில்லை.
திமுக மாமன்ற உறுப்பினர் ரிக்டா என்பவர் தனது உயிருக்கு ஆபத்து என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது எனவே இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அதில் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலரும் எதிர்க்கட்சி மாநகராட்சி கொறடாவுமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போதைப்பொருள்கள் அதிகரிப்பு போன்ற சம்பவங்களை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தார்.
தொடர்ந்து மாமன்ற கூட்டத்தை புறக்கணிப்பு செய்து விட்டு வெளி நடப்பு செய்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது,
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. கடந்த வாரம் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் தூத்துக்குடி இனிகோ நகரில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் சரளமாக கிடைக்கிறது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதால் அதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை மாவட்ட காவல்துறை எடுக்கவில்லை.
திமுக மாமன்ற உறுப்பினர் ரிக்டா என்பவர் தனது உயிருக்கு ஆபத்து என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது எனவே, மாவட்ட நிர்வாகம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.