தமிழகத்தில் வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு
தமிழகத்தின் பல இடங்களில், வெப்ப நிலை இயல்பை விட, 5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
வெப்பம் உயர்வு:
மார்ச் முதல் கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், வெப்ப நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம், ஒரு வாரமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழையும் பெய்கிறது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, கரூர் மாவட்டம் பரமத்தியில், அதிகபட்சமாக, 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தில், இயல்பை விட சராசரி வெப்ப நிலை, 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
மழை தொடரும் :
நேற்று காலையுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தேனி, கந்தர்வகோட்டை, சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில், 3; மதுரை தெற்கு, பேரையூர், புதுக்கோட்டை பெருங்களூர், சிவகிரியில், 2; பண்ருட்டி, வானுாரில் தலா, 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
‘அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சில பகுதிகளில், இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, வானிலை மையம் தெரிவித்து உள்ளது.