
எல்லா இடங்களிலும் பொறுப்புள்ள அதிகாாிகள் அமைவது என்பது ஒரு வரப்பிரசாதம் – மேயர் ஜெகன் பொியசாமி புகழாரம்
தூத்துக்குடி பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அரசுத்துறை அதிகாாிகள் அலுவலர்கள் பங்கு முக்கியம் வகிக்கிறது. மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். மாநகராட்சி உதவி ஆணையர் தனசிங், வல்லநாடு நீரேற்ற நிலைய பொறியாளா் பாபு, வாகன ஓட்டுநர் ஜவஹா், ஆகிய 3 பேரும் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெறும் பிாிவு உபசாரவிழா மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்,
நான் மேயராக பொறுப்பேற்று 27 மாதங்களாக மாநகராட்சி அதிகாாிகள் மற்றும் அலுவலர்களுடன் பல்ேவறு நிகழ்வுகள் மட்டுமின்றி கடந்த காலத்தில் பெய்த கன மழை வௌ்ளத்தின் போது என்னோடு இரவு பகலாக மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றிய அதிகாாிகள் அரசுத்துறை அலுவலா்களை எண்ணிப்பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் நான் அரசியல் கட்சியிலிருந்து பொதுமக்களுக்காக பணியாற்றும் பணியில் முழுமையாக ஈடுபட்டு பணியாற்றிவரும் இந்த சூழ்நிலையில், மக்களுக்கான திட்டங்களை தயாாித்து அதை செயல்படுத்துவதற்கும் துணையாக இருப்பது நீங்கள் தான் நாங்கள் ஆற்றுகின்ற எல்லா பணிகளுக்கும் இங்கு அமர்ந்திருக்கின்ற அதிகாாிகள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரையும் சேரும் இன்று ஓய்வு பெறும் 3 பேருமே ஓவ்வொரு வகையிலுமே சாதனையாளர்கள் தான் நான் பழகிய காலத்திலிருந்து உதவி ஆணையர் தனசிங், மிகவும் அமைதியானவர் தன்னலம் கருதாமல் பணிகளை செய்யக்கூடியவர் இதுபோல் எல்லா இடங்களிலும் அதிகாாிகள் அமைவது என்பது ஒரு வரப்பிரசாதம் ஆகும். அரசு அதிகாாியாக இருந்து மட்டும் தான் நீங்கள் ஓய்வு பெற்றுள்ளீா்கள். எப்போது வேண்டுமானாலும் இந்த மாநகராட்சிக்கு நீங்கள் வரலாம். மேலும் பல வளா்ச்சி பணிகளுக்கு என்னை போன்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கலாம். இது உங்கள் இடம் உயா்வான பதவிலிருந்தும் ஓட்டுநர் பணியிலிருந்தும் சிறப்பாக பணியாற்றிய 3 பேரையும் மனதார வாழ்த்துகிறேன் என்று பேசிய பின் ரோஜாப்பூ மாலை அணிவித்து கௌரவித்தார்.
விழாவில் இணை ஆணையா் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிாின்ஸ் ராஜேந்திரன், உதவி ஆணையா்கள் சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், சொர்ணலதா, சேகா், முனீர்அகமது, ஸ்மார்ட் சிட்டி திட்ட ெசயற் பொறியாளா்கள் ராமசந்திரன், ரெங்கநாதன், நகா்நல அலுவலர் டாக்டர் தினேஷ், சுகாதார ஆய்வாளர்கள் ஹாிகணேஷ், ராஜசேகா், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், மூத்த செய்தியாளர்கள் குமாரவேல், சண்முகசுந்தரம், உள்பட மாநகராட்சி அதிகாாிகள் அலுவலர்கள் சால்வை பூங்கொத்து மாலைகள் அணிவித்து வாழ்த்துக்களை தொிவித்தனர்.