
தூத்துக்குடியில் சமூகநலத்துறை மூலம் 30 பேருக்கு தையல் இயந்திரங்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி தமிழக அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தையல்பயிற்சி மேற்கொண்டவா்களுக்கு சமூகநலத்துறையின் மூலம் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா தலைமை வகித்தார்.
சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு 3.60 லட்சம் மதிப்பீல் இலவச தையல் இயந்திரத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி கூறுகையில் அரசின் திட்டங்களை பெற்றுள்ள நீங்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட பொறுப்பு அலுவலர் காயத்திாி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபிபெர்னான்டோ, குழந்தை வளர்ச்சி திட்ட பொறுப்பு அலுவலர் சண்முகபிாியா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாநகர கலைஇலக்கிய அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், கவுன்சிலர் கந்தசாமி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, மற்றும் மணி, மாாிமுத்து, அல்பட், உள்பட பயனாளிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.