
சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தொழிலாளர் உதவி ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் லோக. பாலாஜி சரவணன் ஆலோசனை பேரில் தமிழ்நாடு காவல் துறை, சிப்காட் காவல் நிலையம், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தொழிலாளர் நலத்துறை , சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஆர். மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க.மாணிக்கவாசகம், அ.பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் க.திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த தொழிலாளர் நல அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம், ஊராட்சி துவக்கப்பள்ளி, சோரீஸ்புரம் பிரதான சாலை வழியாக அரசு மேல்நிலைப் பள்ளி சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில் அய்யனடைப்பு முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஆ. ஆதிநாராயணன், சொரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டி.சுதா, உதவி தலைமை ஆசிரியர் பொ.விஜிலா, துளசி சோஷியல் சர்வீஸ் அறக்கட்டளை இயக்குனர் எஸ். தனலெட்சுமி, நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் அ. முத்துப்பாண்டி,யன், சிகரம் அறக்கட்டளை இயக்குனர் பா. முருகன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக ஊராட்சி செயலர் சங்கரராமசுப்பிர மணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணியை பள்ளியின் பசுமைப்படை ஆசிரியர் ர. மரிய ஜெயந்தி, தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.