
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் வைத்து இன்று (06.07.2024) காலை நடைபெற்றது. கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்து, ஆயுதப்படை காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. பழனிச்சாமி, சார்பு ஆய்வாளர் வெங்கடேசன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.
CATEGORIES மாவட்டம்