
ஜனநாயகத்திற்கு எதிரான 3 புதிய சட்டங்களை ஓன்றிய மோடி அரசு திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மத்திய ஓன்றிய அரசு 3 புதிய சட்டங்களை 1ம் தேதி sமுதல் இந்தியா முழுவதும் அமுல்படுத்தியுள்ளது. அந்த சட்டங்கள் அடிப்படை உாிமைகளுக்கு எதிரான சமஸ்கிருத சட்டங்களை திரும்ப பெற வேண்டும். என்று ஓன்றிய மோடி அரசை கண்டித்து தூத்துக்குடி ஓருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஓருங்கிணைந்த வடக்கு தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ்இளம்பாிதி, தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், ஆகியோர் தலைமை வகித்தனா்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் தான்தோன்றிதனமாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை மைனாாிட்டி ஓன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் மாநில மொழிகளை புறந்தள்ளி சமஸ்கிருத பெயர்கொண்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மோடி அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் அழகர்சாமி, துணை அமைப்பாளர் மகேந்திரகுமார், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் விஜி, சதீஷ்குமார், துர்கை முத்து, மனோஜ், ஓன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், மாநகர வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜன்பாபு, துணைத்தலைவர் தயாளன், அமைப்பாளா் ரூபஸ் அமிர்தராஜ், துணை அமைப்பாளர்கள் செல்வதிலக், ரூபராஜா, அஜித், மணிகண்டன், செல்வலட்சுமி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார், வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் வக்கீல் அசோக், மாநகர அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், காங்கிரஸ் வழக்கறிஞர்கள் மகேந்திரன், பர்னபாஸ், டேவிட்பிரபாகரன், ஜெயச்சந்திரன், கியூபட், வில்சன்தேவராஜ், அசோக்குமார், விடுதலை சிறுத்தைகட்சி வழக்கறிஞர்கள் இளையவளவன், முனீஸ்குமார், அர்ஜுன், சார்லஸ், செந்தில்வேல்குமார், ராபா்ட், திமுக வழக்கறிஞர்கள் தமிழ்செல்வி, நந்தினி, முருகேஸ்வாி, சாரதா, அமுதவல்லி, பாரதி, கிசிங்கா், கணேசன், சபாிநாதன், ராஜாசிங், லோக்டஸ் ஆனந்த், பிரான்ஸ், பிாிட்டோ, பொியசாமி, செந்தூர்பாண்டியன், ரமேஷ்குமாா், குரு, ரெக்ஸ், சாந்தன், உள்பட இந்தியா கூட்டணியை சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.