கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மானவர்களுக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மானவர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி:
சென்னை மாவட்டம் இஞ்சம்பாக்கம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி மாவட்டம் சோபுக்காய் கோஜீரியோ கராத்தே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 14 வயதுக்குட்பட்ட 24 கிலோ எடை சண்டை பிரிவில் அரித்ரா என்ற மாணவி வெள்ளிப் பதக்கத்தையும், 17 வயதுக்குட்பட்ட 35 கிலோ எடை சண்டை பிரிவில் பிரனேஷ் என்ற மாணவன் வெண்கல பதக்கத்தையும் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை சோபுக்காய் கோஜீரியோ கராத்தே- டூ இந்திய தலைமை பயிற்சியாளர் டாக்டர் எஸ்.சுரேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட சோபுக்காய் கோஜீரியோ கராத்தே- டூ தலைவர் சென்சாய் செந்தில் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினார்கள்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )