
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக 16ம் தேதி முதல் கடன் வழங்கும் முகாம்
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 16ம்தேதி முதல் 27 கிளைகள் மூலம் கடன் வழங்கும் முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலாண்மை இயக்குநர் நடுக்காட்டுராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பாரா ளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், சுயஉதவி குழுக்கள், வியாபாரிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் கடன் வழங்கும் முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் நடுக்காட்டுராஜா வரும் 16ம்தேதி முதல் வங்கியின் 27கிளைகள் மூலம் கடன் வழங்கும் முகாம்கள் நடத்த தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பாக வங்கியின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் கடன் வழங்கும் முகாம்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் விளம்பரங்கள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் வங்கியின் பொது மேலாளர் சரவணன், முதன்மை வருவாய் அலுவலர் விஜயன், உதவி பொது மேலாளர்கள் சீனிவாசன், பூமிசெல்வி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.