புதிய கரன்சி அச்சிடுவதை ரிசர்வ் வங்கி குறைக்கிறது
மின்னணு பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால் புதிய கரன்சி அச்சிடுவதை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், ‘இகோரப்’ ஆய்வறிக்கை: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், நாட்டின் நிதிப் பரிவர்த்தனைகளில், குறைந்தபட்சம், 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கரன்சிகள், கூடுதலாக புழக்கத்தில் இருந்துள்ளன. ஏராளமானோர், தற்போது, ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து, ‘இ – வாலட், நெட் பேங்க்கிங்’ போன்ற மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
தற்போது, 2.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன; இது, குறைந்தபட்சம், 3.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மார்ச் 24 நிலவரப்படி, ரிசர்வ் வங்கி, 1.17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு மட்டும் கரன்சிகளை அச்சடித்தால் போதும். எஞ்சிய, 1.15 லட்சம் கோடி ரூபாய் அச்சடிக்க தேவையில்லை என்பதால், அதற்கான அச்சடிப்பு செலவு குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஏப்., 15க்குள் நாட்டின் பணப்புழக்கம், முழு இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.