உலகம் முழுவதும் ஆஸ்துமா நோயால் 30 கோடி பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்
காற்று மாசுபாடு உள்ளிட்ட காரணத்தால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் 2025-ம் ஆண்டில் 40 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஆஸ்துமாவின் தாக்கம் 10 முதல் 15% ஆக உள்ளது என்றும் ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் பேர் ஆஸ்துமா தாக்கத்தால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆஸ்துமா அமைப்பான க்ளோபல் இனிசியேஷன் ஆஃப் ஆஸ்துமாவின் புள்ளிவிவரம் கூறுகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மே 2-வது செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகை பிடித்தல், தொழிற்சாலை புகை, வாகனப்புகை, குப்பைகளை எரித்தல் உள்ளிட்டவை 70% வரை ஆஸ்துமாவிற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் ஆஸ்துமாவை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். வரும் முன் காக்கும் நோக்கத்தில் பல்வேறு தன்னார்வு அமைப்பினர் விழிப்புணர்வு முயற்சிகள் எடுத்தாலும் காற்று மாசு குறைந்தபாடில்லை என்பது நிதர்சணமான உன்மை.