தூத்துக்குடியில் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து மனைவியை அரிவாளால் கழுத்தில் வெட்டிவிட்டு கணவர்  தப்பியோட்டம் – பட்டப்பகலில் பயங்கரம்

தூத்துக்குடியில் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து மனைவியை அரிவாளால் கழுத்தில் வெட்டிவிட்டு கணவர் தப்பியோட்டம் – பட்டப்பகலில் பயங்கரம்

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை ஆட்சியர் அலுவலகம் அருகே மனைவி நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தில் கணவர் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி (24). இவர் அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். .இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மகளிர் சுயதொழில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திரும்பி சென்றபோது கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 3 பேர் வழிமறித்து அறிவாலயத்தை கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அமராவதியை வெட்டிய கணவர் குணா என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு கோரி இருந்த நிலையில் நேற்று தான் இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

குடும்ப தகராறு காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை அறிவாளி வெட்டிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )