தூத்துக்குடி விமான நிலையம் சர்வ தேச விமான நிலையமாக விரைவில் மாற்றம்

தூத்துக்குடி விமான நிலையம் சர்வ தேச விமான நிலையமாக விரைவில் மாற்றம்

தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விரைவில் மாற உள்ளதாக நிலைய இயக்குனர் ராஜேஷ் தெரிவித்தார்‌.

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து சிறப்புக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல் சங்கத் தலைவர் டி. ஆர். தமிழரசு தலைமையில் நடந்தது பொதுச் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வைத்தார்

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ஆர். ராஜேஷ் கலந்து கொண்டு பேசியதாவது

தூத்துக்குடி விமான நிலையமானது பயணிகளுக்கு சிறந்த சேவை மற்றும் வசதிகள் வழங்குவதற்கான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்பொழுது விமான நிலைய ஓடுதளம் மற்றும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் 2024-க்குள் முடிவடைவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி விமான நிலையம், தென்னிந்திய சர்வதேச விமான நிலையமாகவும் மாறுவதுடன் சி.ஐ.பி மற்றும் விஐபிகள்-க்கள் ஓய்வெடுக்கும் அறைகள் அமைப்பதற்கு அனுமதி பெற உள்ளதாகவும், இரவு நேர விமான சேவை விரைவில் ஏற்படுத்தப்படும். தூத்துக்குடி டெல்லிக்கு விமான சேவைக்கு விமானங்கள் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

பின்னர், விமான நிலைய இயக்குநர் ராஜேஷ தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள், புதிய டெரிமினல் கட்டிடம், நவீன உபகரணங்களுடனான தீயணைப்பு நிலையம் ஆகியவைகளைக் குறித்தும் விளக்கமாக கூறினார். பின்னர், உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளுக்கும, சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகச் செயலாளர் பிரேம் பால் விநாயகம் முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ் உள்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )