
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் ஏரல் பகுதிகளில் கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் சிறுவணிகர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு சிறுவணிகக் கடன் திட்டத்தில் மிகக் குறைந்த வட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி காசோலைகளை வழங்கினார்.
உடன் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் நடுக்காட்டுராஜா, பொது மேலாளர் சுந்தரேஷ்வரன் ஆகியோர் உள்ளனர்.
CATEGORIES மாவட்டம்