
தை அமாவாசை: திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமானோர் தர்ப்பணம் செய்து தங்களின் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த நாட்களாக ஆடி அம்மாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
மேலும் இந்த அம்மாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களின் பரிபூரண ஆசை கிடைக்கும் என்று கருதப்படும்
நிலையில், நீர் நிலைகள் உள்ள பகுதிகளான ஆற்றுப்பகுதி மற்றும் கடற்கரை பகுதியில் அமர்ந்து தர்ப்பணம் செய்து அவர்களின் முன்னோர்களை வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் குவிந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும்
கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு ஏள் மற்றும் தர்ப்பணம் செய்து, பிண்டம் வளர்த்து தர்ப்பணம் செய்து, தங்கள் முன்னோர்களை வழிபட்டு, பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தை அமாவாசையை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு நான்கு முப்பது மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.