
சிறந்த சமூக சேவைக்காக அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டு
குலோபல் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நடந்த விழாவில் அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்ரியா பாலமுருகனுக்கு சிறந்த சேவையை பாராட்டி நீதிபதி டாக்டர் கே.வெங்கடேசன் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வாழ்த்தினார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கி சிறப்பாக பணியாற்றினார்.
விழாவில் முன்னாள் சிறப்பு கமிஷனர் கே.சம்பத்குமார் இ ஆ ப, மனித உரிமை கமிஷன் உறுப்பினர் டாக்டர் ஏ.சி. மோகன்தாஸ் இ ஆ ப, சி ஆர் பி எப் ஆய்வாளர் டி. சேகர், முன்னாள் டெப்டி கமிஷனர் எம்.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES மாவட்டம்