
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய பெருவிழா – ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா. 02-02-2024 வெள்ளிக்கிழமை மாலை. ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலியுடன் இந்த ஆண்டு திருவிழா கொண்டாட்ட நிகழ்வுகள் வெகு விமர்சையாக, தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பேரருள்பணி. பன்னீர்செல்வம் தலைமையில், பங்குத்தந்தை அருள்திரு. அன்றனி புருனோ, ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
ஒன்பதாம் நாள் திருவிழா மாலை ஆராதனை முன்னாள் மறைமாவட்ட முதன்மைகுரு அருள்பணி. ச.தே.செல்வராஜ் அவர்களும், கீழவைப்பார் பங்குத்தந்தை அருள்பணி. அந்தோணி ஜெகதீஷ் அவர்கள் மறையுரை நிகழ்த்தினார்.
பத்தாம் நாள் திருவிழாவான இன்று காலை கோலாகலமாக புனித லூர்து அன்னையின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தூத்துக்குடி மறைவட்ட முதன்மைகுரு பேரருள்பணி. ஜான் பென்சன் தலைமையேற்க, ஆன்மீகத் தந்தை சிறுமலர் குருமடம் அருள்பணி. சகாய ஜோசப், பங்குத்தந்தை. அருள்பணி. ஆன்றனி புருனோ, ரத்தினபுரம் பங்குத்தந்தை அருள்பணி. இருதயராஜ், திரேஸ்புரம் உதவி பங்குத்தந்தை அருள்பணி. அலெக்ஸ், கப்புச்சின் சபை துறவி இருதயராஜ் ஆகியோர் ஆடம்பர கூட்டுத் திருவிழாவில் திருப்பலியை சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்- சிறுமியர்களுக்கு புதுநன்மை விருந்து திரளான கிறிஸ்துவ மக்கள் மத்தியில் நடைபெற்றது.
இன்று மாலை ஜெபமாலை திவ்ய நற்கருணை ஆசியுடன் கொடி இறக்கப்பட்டு இனிதே திருவிழா நிகழ்வுகள் நிறைவுற்றன.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அன்றனி புருனோ தலைமையில் அருள் சகோதரிகள், பங்கு பணி குழுவினர், இறைமக்கள் செய்திருந்தனர்.