
தூத்துக்குடியில் 300 வது வார மரக்கன்றுகள் நடும் விழா- மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
தூத்துக்குடியில் 300 வது வாரமாக மரக்கன்றுகள் நடும் விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டினார் .
தூத்துக்குடி ஆல்கேன் டிரஸ்ட் சார்பில் தூத்துக்குடியை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் வாரம் தோறும் 20 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சமுதாயப் ணி, இன்று 300வது வாரமாக வெகு விமர்சியாக தூத்துக்குடி பிரையன்ட்நகர் இரண்டாவது தெருவில் மரக்கன்றுகள் நடும் விழா அதன் நிறுவனர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகள் நடு ம் பணியை துவக்கி வைத்து அதன் உறுப்பினர் அனைவருக்கும் ஷால்வை அனைத்து கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் பேக்கரி அதிபர் ஜோசப் செல்வராஜ், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரவீந்திரன், இசக்கிமுத்து, பகுதி செயலாளர் பிரபாகரன், சுரேஷ்குமார், முன்னாள் மகளிர் அணி கிளைச் செயலாளர் பாலா டயானா, திமுக மாவட்ட பிரதிநிதி நாராயணன், இலக்கிய அணி துணை செயலாளர் பால்ராஜ் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் மருதபெருமாள், மகேஸ்வர சிங், கேசவன், ஆசீர், ராஜ், ராஜேஷ், ஆனந்தராஜ், பிரசன்னா, வேல்பாண்டி, ஐயப்பன், பிரவீன், அபிஷேக், தினேஷ் குமார், பேச்சிமுத்து, கோபி, நாராயணன், பாலசிங், ஜெயா, செந்தில், வேல்முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.