விவசாயம் வளம்பெற தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் பெண்கள் இளநீர் அபிஷேகம்

விவசாயம் வளம்பெற தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் பெண்கள் இளநீர் அபிஷேகம்

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் திருவிக நகர் சக்திபீடத்தில் தைப்பூச விழா நடைபெற்றது. சக்திகொடியை மாவட்ட துணைத் தலைவர் பண்டார முருகன் ஏற்றி வைத்தார். குரு வழிபாட்டை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார். விவசாயம் வளம்பெறவும், மக்கள் வளமுடன் வாழவும், தொழில்வளம் சிறக்கவும், தொற்று நோயிலிருந்து மக்களை காக்கவும் வேண்டி பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அபிஷேக நிகழ்ச்சியை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை செய்தார். அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட மகளிர் அணி தலைவர் கோவில்பட்டி பத்மாவதி தொடங்கி வைத்தார்.  

விழாவில், ஆன்மிக இயக்க பொருளாளர் கண்ணன், பிரச்சார செயலாளர் முத்தையா, சக்திபீட துணைத் தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, வட்ட தலைவர்கள் அழகர்சாமி, தினேஷ்குமார், ஆத்தூர் அன்பு, ஆறுமுகனேரி நாகம்மாள், வேப்பலோடை முனியசாமி, சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், சக்திபீட மகளிர் அணி அகிலா, செல்வி, புவனேஸ்வரி உட்பட ஏராளமான செவ்வாடை பக்தர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )