Breaking News
அரசியல் வர்த்தகமாகி விட்டது : கமலஹாசன்

பகுத்தறிவு வாதத்தை பேசிக்கொண்டிருப்பேன் என நடிகர் கமலஹான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டியின் போது அவர் கூறியதாவது:

* பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன்

* அரசியல் வர்த்தகமாகி விட்டது.
* அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது தகுதி.

* திராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்ல முடியாது.
* நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்.
* தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தேர்வு செய்து கொள்ளட்டும்
* ஜெயலலிதா மரணம்குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.
* எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்க வேண்டும்.
* ஜல்லிகட்டு போராட்டம் எரிமலையின் நுனி
* தவறுகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும்.
* சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும்.
* வாக்குகளுக்கு விலை பேசும் போது கேள்விகள் எழுப்ப முடியாது
* தமிழகத்தில் தேர்தல் வேண்டும்.

* தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.