Breaking News
டுவிட்டரில் உடனுக்குடன் பதிலளிக்கும் மோடி

டுவிட்டர் பக்கத்தில், தனக்கு பாராட்டு தெரிவிக்கும் அனைவருக்கும் பிரதமர் மோடி, உடனுக்குடன் நன்றி தெரிவித்து பதிலளித்து வருகிறார்.
உ.பி., மற்றும் உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., பெற்ற வரலாறு காணாத அமோக வெற்றிக்கு சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கனடா பிரதமர் ஸ்டீபன் ஹர்பர், கிரிக்கெட் வீரர் முகம்மது கைப் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மட்டுமின்றி, சாமானியர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாராட்டு தெரிவிக்கும் அனைவருக்கும் பிரதமர் மோடியும் உடனுக்குடன் நன்றி தெரிவித்து, டுவிட் செய்து வருகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.