Breaking News
இனி பணம் எடுக்க கட்டுப்பாடு இல்லை

கடந்த சில நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இன்றுடன் நீங்குகின்றன.

நீங்கியது கட்டுப்பாடு :

நவம்பர் 8 ம் தேதி பழைய ரூ.500, 1,000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன் பிறகு பண தட்டுப்பாட்டை குறைப்பதற்காக, வங்கிகள் மற்றும் ஏடிஎம்.,களில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. பிறகு புதிய ரூ.500 மற்றும் 2,000 நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது.
இதனால் பணத்தட்டுப்பாடு குறைய துவங்கியதை அடுத்து, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. ஜனவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பில், பிப்ரவரி 20ம் தேதி முதல் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.24,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும் எனவும், மார்ச் 13 ம் தேதியிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
இதனால் இன்று முதல் வங்கி மற்றும் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுகின்றன. இருப்பினும் பணத்தட்டுப்பாடு முற்றிலுமாக சரியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.