Breaking News
சீனா தவிர்த்தால் அமெரிக்கா செய்யும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

”வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும்,” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
சீன அதிபர் ஜீ ஜின்பங், டிரம்ப்பை சந்தித்து பேச இருக்கிறார்.இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது:சீனா அதிபர் ஜீ ஜின்பங்குடனான சந்திப்பில் நிறைய பேச வேண்டி உள்ளது. வர்த்தகம் மற்றும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் குறித்து ஜீ ஜின்பங்குடன் பேச இருக்கிறேன்.மேலும் வடகொரியாவைப் பற்றியும் பேச இருக்கிறேன். வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு நடவடிக்கை எடுக்க சீனா அமெரிக்காவுக்கு உதவினால் அது சீனாவுக்கு மிக நல்லது. அவர்கள் உதவவில்லை என்றாலும் அமெரிக்கா தனியாக வடகொரியாவை எதிர் கொள்ளும், என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.