Breaking News
பதற்றமடைந்த மாநிலமாக அசாம்: மத்திய அரசு அறிவிப்பு

அசாம் மாநிலம் முழுவதும் பதற்றமடைந்த பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தை ஒட்டியுள்ளா மேகாலயா எல்லைப்பகுதியையும் பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மாதம் ராணுவ கட்டுப்பாடு

அசாம் மாநிலம் முழுவதும் உல்பா, என்.டி.எப்.பி., ஆகிய அமைப்புக்களின் வன்முறை நடவடிக்கையின் காரணமாக 3 மாதத்திற்கு பதற்றமடைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் 2016ல் 75 வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் 4 பாதுகாப்பு படையினர் உட்பட 33 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 14 பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர 2017 ல் ஒன்பது வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விபர தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.