Breaking News
தேர்வு வழிகாட்டல் இல்லை : மாணவர்கள் குழப்பம்

தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதற்கான வழிகாட்டல் விதிகள் வெளியிடப்படாததால், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் ௧ வகுப்புக்கும், இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண்ணுக்கு பதில், 100 மதிப்பெண்ணுக்கே கேள்விகள் இடம் பெறும்.
அதில், செய்முறை தேர்வு உள்ள பாடங்களில், ‘தியரி’ என்ற, கருத்தியல் தேர்வுக்கு, 70; அகமதிப்பீடு, 10; செய்முறை தேர்வுக்கு, 20 மதிப்பெண் தரப்படும். இதில், தேர்ச்சிக்கு, 35 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஆனால், தேர்வு எப்படி நடத்தப்படும்; வினாத்தாள் முறை என்ன; எந்தெந்த பாடங்களில், எந்த வகை கேள்விகள் இடம் பெறும்; புத்தகத்தில் உள்ள உதாரண கேள்விகள் இடம் பெறுமா என்பது போன்ற வழிகாட்டுதல், இன்னும் வெளியிடப்படவில்லை.

அகமதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வில், 30 மதிப்பெண் எடுத்து, ‘தியரி’யில், ஐந்து மதிப்பெண் எடுத்தால் போதுமா; குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் பெற வேண்டுமா என தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.அதேபோல, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பிளஸ் 1 பாடப் புத்தகத்தில், 200 மதிப்பெண்களுக்கு, ‘ப்ளூ பிரின்ட்’ வழங்கப்பட்டு உள்ளதும், குழப்பத்தை
ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த, தெளிவான வழிகாட்டல் விதிகளை அரசு வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.