Breaking News
சினிமா தியேட்டர்கள் இன்று இயங்கும் : அரசுடன் நடந்த பேச்சில் உடன்பாடு

திரைத் துறையினர் அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, சினிமா தியேட்டர் உரிமையாளர்களின் நான்கு நாட்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது. இன்று முதல், தியேட்டர்கள் திறக்கப் படுகின்றன.

நாடு முழுவதும், ஜூலை, 1ல் அமலுக்கு வந்த, ஜி.எஸ்.டி., நடைமுறையின்படி, தமிழகத்தில், 100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட்டுக்கு, 18 சதவீதம்; அதற்கு மேலான டிக்கெட்டுக்கு, 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இது தவிர, தமிழக அரசு, உள்ளாட்சிகள் மூலம், 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இதில், கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி, தியேட்டர் உரிமையாளர்கள், நேற்று, நான்காவது நாளாக, சினிமா தியேட்டர்களை மூடி, போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து, வரியை ரத்து செய்வது குறித்து, தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர், அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் சங்க தலைவர், விஷால் மற்றும் திரையுலகினர், அரசுடன் பேச்சு நடத்தினர். நேற்று, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில், தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அபிராமி ராமநாதன் கூறியதாவது:அரசுடன், தற்காலிக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. டிக்கெட் விலையை நிர்ணயிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு சார்பில், ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும், திரைத்துறை சார்பில், நான், விஷால், கதிரேசன், திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட, எட்டு பேர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி, தியேட்டர் கட்டணம்; கேளிக்கை வரி குறித்து முடிவு செய்யும். தற்போதைக்கு, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில், டிக்கெட் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணம் எவ்வளவு? : மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டரில், டிக்கெட் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 128 ரூபாய் டிக்கெட், 163 ரூபாயாக உயரும். குறைந்த பட்ச டிக்கெட், 30 ரூபாயாக உயரும் என, கூறப்படுகிறது. கேளிக்கை வரி குறித்து, திரைத்துறையினர் ஏதும் கூறவில்லை. இன்று தியேட்டர்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகே, டிக்கெட் கட்டணம் குறித்து, தெளிவான விபரங்கள் தெரிய வரும்.திரைத் துறையினர் அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, சினிமா தியேட்டர் உரிமையாளர்களின் நான்கு நாட்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது. இன்று முதல், தியேட்டர்கள் திறக்கப் படுகின்றன. நாடு முழுவதும், ஜூலை, 1ல் அமலுக்கு வந்த, ஜி.எஸ்.டி., நடைமுறையின்படி, தமிழகத்தில், 100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட்டுக்கு, 18 சதவீதம்; அதற்கு மேலான டிக்கெட்டுக்கு, 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இது தவிர, தமிழக அரசு, உள்ளாட்சிகள் மூலம், 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்துள்ளது. இதில், கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி, தியேட்டர் உரிமையாளர்கள், நேற்று, நான்காவது நாளாக, சினிமா தியேட்டர்களை மூடி, போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து, வரியை ரத்து செய்வது குறித்து, தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர், அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் சங்க தலைவர், விஷால் மற்றும் திரையுலகினர், அரசுடன் பேச்சு நடத்தினர். நேற்று, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில், தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அபிராமி ராமநாதன் கூறியதாவது:அரசுடன், தற்காலிக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. டிக்கெட் விலையை நிர்ணயிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு சார்பில், ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும், திரைத்துறை சார்பில், நான், விஷால், கதிரேசன், திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட, எட்டு பேர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி, தியேட்டர் கட்டணம்; கேளிக்கை வரி குறித்து முடிவு செய்யும். தற்போதைக்கு, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில், டிக்கெட் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். கட்டணம் எவ்வளவு? : மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டரில், டிக்கெட் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 128 ரூபாய் டிக்கெட், 163 ரூபாயாக உயரும். குறைந்த பட்ச டிக்கெட், 30 ரூபாயாக உயரும் என, கூறப்படுகிறது. கேளிக்கை வரி குறித்து, திரைத்துறையினர் ஏதும் கூறவில்லை. இன்று தியேட்டர்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகே, டிக்கெட் கட்டணம் குறித்து, தெளிவான விபரங்கள் தெரிய வரும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.