ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முறைகேடாக உத்தரவு பிறப்பிக்கும் கலெக்டர் அலுவலக மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்

ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முறைகேடாக உத்தரவு பிறப்பிக்கும் கலெக்டர் அலுவலக மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்

ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முறைகேடாக உத்தரவு பிறப்பிக்கும் கலெக்டர் அலுவலக மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்

நாட்டை ஏமாற்றும் மோடி, கடம்பூர் ராஜு, சண்முகநாதன் மீது நாம் இந்தியர் கட்சி மாநில தலைவர் ராஜா கடும் தாக்கு:

தூத்துக்குடி நாம் இந்தியர்கட்சி கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் 06/03/2024 அன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பொன்ராஜ், தலைமை வகிக்தார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் தென்மண்டல செயலாளர் ராமசந்திரன் தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் நாம் இந்தியர் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா பேசுகையில், இறைவனின் அருளாசியோடு 7-ம் ஆண்டு தொடக்கவிழா ஆரம்பமாகியுள்ள இவ்வேலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் சிறிய செடியாக வளர்ந்துள்ளது. 2026ல் எங்கள் கட்சி எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றம் செல்வார். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் தேசிய அரசியலில் தவறுகள் குற்றங்கள் பாகுபாடுகள் அதிகம் நடைபெறுகின்றன. எங்கள் இலக்கு 2031ல் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தான். தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்சி இருப்பதை அரசாங்கமே அதை நடத்துவதற்கு முன் வரவேண்டும் எல்லோருமே தன் குழந்தைகள் படித்து அறிவாளியாகி பொிய பதவிக்கு வரவேண்டும் என்று தான் நினைப்பார்கள் அனைத்து பாடத்தையுமே கொண்டுவரவில்லை யென்றாலும் நான்கு பாடத்தையாவது கொண்டு வரவேண்டும்.

மத்திய அரசு கேஸ் விலையை உயர்த்தி அதை வியாபாரமாக்கி விட்டது. 80 சதவீதம் பேர் அதற்கு மாறி விட்டனர். அதனால் சமைக்கும் உணவு களில் சத்துக்கள் குறைந்து விட்டன. 60 வயதை கடந்தவர்கள் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை வருகிறது. தமிழ் மொழியை கற்க வேண்டும். இணைப்பு மொழியாக ஹிந்தி படிக்க வேண்டும். உத்திரபிரதேச மாநிலத்தில் ஓரு சாமியார் தான் முதலமைச்சராக இருக்கிறாா். இந்தியாவை இனி ஆள போவதும் ஓரு சாமியார் தான் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நாட்டுக்காக நான் உழைக்கிறேன் குடும்பம் இல்லை என்று அரசியல் பேசிக்கொண்டு பதவி ஆசையில் திாிகிறார். மீண்டும் அவர் பிரதமரானால் இந்தியாவில் சர்வாதிகாரம் தலை தூக்கும் நிர்மலா சீதாராமனால் பொருளாதாரம் பாதிக்கும், ஷேர் மார்க்கெட்டை பொறுத்தவரை உழைப்பவர்களுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. முதலீடு செய்துவிட்டு உழைக்காமல் சோம்பேறியாக இருப்பவர்களுக்கு தான் சாிவு என்று வரும்போது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது பிரதமர் அதிலும் சில உத்தரவுகளை பிறப்பிக்க கூறுகிறார். எல்லோரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று கூறி அதில் இருப்பை காட்டி மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகிறார்கள் கடத்தல் உள்ளிட்ட தேவையில்லாத செயல்களில் ஈடுபவர்கள் மத்திய அமைச்சர்களோடு தொடர்பு வைத்து கொண்டு குறுக்கு வழியில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். மோடி தற்போது நான் கேரண்டி தருகிறேன் என்று பல்வேறு அறிவிப்புகளை ஹிந்தியில் பேசியும் வௌியிட்டும் வருகிறார். அதற்கு தமிழர்கள் அறிவாளி ஏமாற மாட்டார்கள்.

முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி ஓரு தீவு வைத்திருக்கிறார். அதில் ஏற்பட்ட சில சம்பவத்தால் பிஜேபிக்கு செல்லும் நிலை இருந்தது திடிரென மனம் மாறிவிட்டார். மீண்டும் பிரதமராக மோடி வந்தால் நாம் வாழ முடியாது. விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனா் கொஞ்சம் இறங்கி போய் பேசியிருக்கலாம் ஆனால் மோடி தெற்கேயும் சீக்கியர்கள் வாக்கும் தேவையில்லை. ராமர் கோவிலை திறந்து விட்டோம் அதுவே போதும் என்று நினைக்கிறார். 5 வருடம் உத்தரவாதம் என்ற பெயாில் 25 கிலோ அாிசி நாங்கள் வழங்குகிறோம் என்று மோடி கூறுகிறார். அதற்கு அண்ணாமலையும் இலவசம் என்கிறார். ஆனால் மானிய விலையில் பெற்று வழங்கப்படுகிறது. இதிலும் அவர்கள் அரசியல் தான் செய்கிறார்கள். அண்ணா ஒரு படி அாிசி ஒரு ரூபாய் என்றார். கலைஞர் இலவசம் என்றார். தமிழர்களின் வாிபணத்தில் பல பணிகளை செய்து கொண்டு தாங்கள் செய்வது போல் கூறிவருவது மட்டுமின்றி தமிழக அரசை ரப்பர் ஸ்டாம்பாக வைக்க பார்க்கிறார்.

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஏற்பட்ட உயிாிழப்பிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ் தான் காரணம். அவர் தான் முதல் குற்றவாளி ஆனால் அப்போதைய கலெக்டரும் இணைந்து சில தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு சிலரை காப்பாற்றினார். அமைச்சர் துரைமுருகன், நல்ல நிர்வாகி ஆனால் கனிம வளத்துறை முற்றிலும் சுரண்டப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பதால் இந்த மாவட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதேபோல் மாநகராட்சி அதிகாாிகளும் அதையே பின்பற்றுவதால் பல வளர்ச்சி பணிகள் தடைபடுகின்றது. மக்களை பற்றி யாரும் சிந்திப்பதில்லை.  அதனால் தான் இது போன்ற தவறுகள் நடைபெறுகிறது. எடப்பாடி மிகப்பொிய சுயநலவாதி அதிமுக அவர் வசம் ஆனதால் அவர் அதிர்ஷ்டசாலி, இந்த மாவட்டத்தில் அதிமுகவை அழித்ததில் கடம்பூர் ராஜீக்கு முக்கிய பங்குண்டு வரும் தேர்தலில் உங்களுக்கு அது தொிய வரும் எஸ்.பி சண்முகநாதன் என்னை அதிமுகவில் இணைக்கிறேன் என்று மேலிடத்தில் தொிவித்துள்ளார்.

நீங்கள் போடுவது தப்பு கணக்கு முதல்வர் கவனத்திற்கு நான் செல்கிறேன் என்ற தகவல் சென்றுள்ளது. பலரும் அது சம்பந்தமாக விசாாித்தனர். சண்முகநாதன் வேண்டும் என்றால் நாம் இந்தியர் கட்சியில் வந்து இணைந்து கொள்ளுங்கள் வரும் சட்டமன்ற தோ்தலில் திருவைகுண்டம் தொகுதியில் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். பிரதமர் மோடி டிஜிட்டல் முறையில் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கிறேன் என்று பெருமையாக பேசிக்கொள்கிறார். மக்களின் கஷ்டம் தொியாதவர் மோடி 40 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக இருந்த தொழிலதிபர்கள் தற்போது பலர் கஷ்டப்படுகிறார்கள் இதுவா முன்னேற்றம் 400 இடம் கிடைக்கும் என்று கூறுகிறார் அப்படி ஓரு வேளை வெற்றி பெற்று பிரதமராக மோடி வந்தால் எல்லோருமே ஏழையாகும் நிலைக்கு தள்ளப்படுவோம். அந்த அளவிற்கு தேவையில்லாத பல திட்டங்கள் சட்டங்கள் மூலம் பாதிக்கப்படுகின்றனர்.

இரண்டாயிரம் நோட்டு செல்லாத அறிவிப்பு திடிரென்று வந்ததால் எல்லோரும் பாதிப்பு இப்போது 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கவில்லை. இவர் பிரதமரானால் 10 ரூபாய், 20 ரூபாய், இனி செல்லாத பணமாக மாறிவிடும் யார்மீதும் உள்நோக்கம் கொண்டு நான் பேசவில்லை. மக்கள் மனநிலையை புாிந்து கொண்டு தேர்தல் நேரம் என்பதால் பேசுகிறேன் அடிமைப்படுத்துதலும் அடித்தட்டு மக்களும் மோடியால் பாதிக்கபட்டுள்ளனர். இணையதளம் பாதிக்கப்பட்ட நேரத்தில் டிஜிட்டல் முறையும் பாதிப்படைந்தது. அதனால் பல சிரமங்களும் ஏற்பட்டது இனி ஓரு காலக்கட்டத்தில் திருமணத்திற்கு வங்கியில் பணம் எடுக்க வேண்டும் என்றால் பொண்ணும் மாப்பிள்ளையும் வங்கிக்கு வந்தால்தான் பணம் கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிடும். வரும் தோ்தலில் நாம் இந்தியர் கட்சி போட்டியிடும். அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். என்று பேசினார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சரவணக்குமார், ரூஸ்வெல்ட், முருகன், சுந்தர், உடையார், சுயம்புலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் அமிர்தகாந்தன், சுரேஷ்பெருமாள், மாாிமுத்து, சின்னத்துரை, குட்டி, ஜேசுராஜன், பிரபாகரன், மாநகர நிர்வாகிகள் முருகேசன், பரமசிவம், நஜீமுதின், இசக்கிகுமார், பொியசாமி, சீனிவாசன், மற்றும் அம்பலகிருஷ்ணன், லிங்ககுமார், ராஜன், லட்சுமணபாண்டியன், திருமணிச்செல்வன், செந்தில்குமாா், கணேசன், தங்கராமன், கின்ஸ்ஜோசப், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர பொருளாளா் விக்டர் நன்றியுரையாற்றினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )