1800 ஆண்டுகள் பழமை.. கஷ்டங்கள் தீர்க்கும் அன்னூர் மன்னீஸ்வரர் சுவாமி

1800 ஆண்டுகள் பழமை.. கஷ்டங்கள் தீர்க்கும் அன்னூர் மன்னீஸ்வரர் சுவாமி

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூரில் அமைந்துள்ளது மன்னீஸ்வரர் திருக்கோயில். 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலை சேர மன்னர்கள் கட்டியிருக்கிறார்கள்.
நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் இதுவாகும். இப்பகுதியை ஆண்ட மன்னர்களின் வரலாறுகளை அறிய இக்கோயிலில் 51 கல்வெட்டுக்கள் உள்ளன. இங்கு மன்னீஸ்வரர் கைலாச விமானத்தின் கீழ் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இங்குள்ள அம்மன் அருந்தவச்செல்வி தனி சன்னதியில் அருள் செய்கிறாள்.
பைரவர், குருபகவான், நடராஜர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஆஞ்சநேயர், நால்வர், அறுபத்து மூவா், திருநீலகண்ட நாயனாருக்கு சன்னதிகளும் உள்ளன. இக்கோயிலின் ஈசானி மூலையில் சனி பகவானுக்கும், கால பைரவருக்கும் தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது. இவ்விடம் உள்ள சனி பகவானை வழிபட்டால் ஏழரை சனி, அஷ்டம சனி தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
முன்பு காடாக இருந்த இப்பகுதியில் ‘அன்னி’ என்ற வேடன் வசித்து வந்தான். பறவை, விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவது பாவம் எனக் கருதிய அவன், அந்தப் பகுதியில் கிடைக்கும் காய்கறிகள், கிழங்குகள், பழங்களை சாப்பிட்டு வந்தான். ஒருநாள் வழக்கம் போல் பூமியில் கிடைக்கும் கிழங்கினை உணவிற்காக எடுக்கும்போது அதிலிருந்து ரத்தம் பீறிட பயந்துபோய் மன்னனிடம் தெரிவித்துள்ளான். அங்கு சென்று பள்ளத்தில் இருந்ததை சங்கிலிகளைப் பினைத்து யானையை வைத்து இழத்தும் வெளியே ஏதும் வராததால் சோர்வடைந்த மன்னனோ அத்திட்டத்தை கைவிட்டார். அப்பொழுது வானில் பறந்த வந்த ஓர் உருவம் இவ்விடத்தில் எம்பெருமான் சிவன் சுயம்பு வடிவாக உள்ளதாக கூறிமறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு பூஜைகள் செய்து தோன்றிய நிலையில் அங்கிருந்து லிங்கமாக வெளிப்பட்டார் எம்பெருமான். பிறகு ராஜ குருவின் ஆலோசனைப்படி அம்மன்னனால் கட்டப்பட்ட கோயில் தான் அன்னூர் மன்னீஸ்வரர் கோயில்.

இவ்வாலத்தில் உள்ள எம்பெருமான் மன்னனை மன்னித்தமையால் மண்ணீஸ்வரர் என்று அழைக்க பெற்றார். மூலவராக எம்பெருமான் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் இங்கு சிவபெருமானை தரிசித்தால் ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கருவறையில் உள்ள சுவாமி மணல் நிறத்தில் உள்ளாா்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )