ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.! ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.!

ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.! ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ஞ் பகுதியில் இந்திய ராணுவ வாகனங்கள் வீரர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ராணுவாகனங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மலைப்பகுதிகளின் உச்சியில் இருந்து ராணுவ வாகனங்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதோடு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியையும் முடுக்கி விட்டு இருக்கிறது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் இந்திய ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )