
தற்போது நம் நாடு ராமர் மயமாகி வருகிறது – ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு
சாமி தரிசனத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்ததாவது, “நம்மளுடைய வாழ்க்கையில் கோயில்கள் முக்கிய மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமத்தை உருவாக்குவதற்கு முன் அங்கு கோயில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்திய அந்த கிராமத்தின் வளர்ச்சியும் அமையும். அப்படி ஒரு ஈர்ப்பு விசையாக இந்த கோவில்கள் அமைந்துள்ளன. காலனி ஆதிக்க காலத்தில் இந்த முறை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் நம் நாடு ராமர் மயமாகி வருகிறது. நாட்டின் ஒவ்வொருவரின் இதயங்களிலும் ராமபிரான் வாழ்ந்து வருகிறார். நாடு முழுவதும் உள்ள மக்களிடம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நம் கோயில்களை தூய்மையாக பராமரிப்பது கோவிலின் நிர்வாகத்தின் கடமை மட்டுமல்ல, பக்தர்களாகிய நமக்கும் அதில் பங்குண்டு. கோயில் மட்டுமில்லாமல் தனியார் இடம், பொது இடங்களையும் நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்தார்.