மத மோதல்களை உருவாக்கி குளிர்காய்வதைப் போல் நாங்கள் செயல்படுவது இல்லை – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி

மத மோதல்களை உருவாக்கி குளிர்காய்வதைப் போல் நாங்கள் செயல்படுவது இல்லை – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நிலையம், மீன்வளத்துறை காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையம் சார்பில் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள அலுவலகத்தில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடிப் படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு பற்றிய ஒருவார கால உள்வளாக பயிற்சி துவக்க விழாவிற்கு மீன்வளத்துறை காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையம் தலைவர் நீதிச்செல்வன் தலைமை வகித்தார்.
தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பயிற்று மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி புத்தகம் வெளியிட்டு பேசுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிற்கிணங்க கடலோரப் பகுதி மீனவர்களின் நலன் காக்கும் வகையில் இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஒருவார காலம் நடைபெறும் இந்த நடவடிக்கையின் மூலம் கடலில் செல்லும் போது ஏற்படும் படகு விபத்துக்கள் மற்றும் சில குறைபாடுகளை தீர்ப்பதற்காக எந்தவிதமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த பயிற்சி மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு நமது மாவட்டத்தில் நம்முடைய திறமையை வளர்த்து மீனவர்கள் வாழ்விலும் உயர வேண்டும். எந்த ஆழ்கடல் பகுதியில் எந்த வகையான வலைகளை வைத்து மீன்பிடித்தால் மீன் கிடைக்கும் என்ற நிலையையும் அடையாளம் கண்டுபிடித்துக் கொள்ளலாம். கப்பலில் பணியாற்றுகின்ற மீனவர்களையும் பாதுகாக்கின்ற அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. முரட்டுத்தனமாக பணியாற்றும் நீங்கள் இனி பயிற்சியின் மூலம் எளிதாக பணி செய்யலாம். புயல் மழை காலங்களிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மீனவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு இருந்ததை தமிழக முதலமைச்சர் 20 சதவீதமாக உயர்த்தி உள்ளார். நீங்கள் அனைவரும் இந்த பயிற்சியின் மூலம் எல்லாவிதத்திலும் தகுதியுள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களது கோரிக்கைகள் எல்லாவற்றையும் படிப்படியாக முதலமைச்சர் செய்து வருகிறார். அதேபோல் மீன்வரத்து அதிகமாக இருந்து மீன் விலை குறைவாக இருக்கும் காலகட்டத்தில் பதப்படுத்தி வைப்பதற்கு தனியார் மூலம் ஸ்டோரேஜ் ஜஸ்பிளாண்ட் அமைக்கப்படும் இந்த மாவட்டத்தில் மீனவர்கள் நலனில் அக்கறைக் கொண்டு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் முன்வைத்து உங்களுக்காக பணியாற்றுகிறார்கள் என்று பேசினார்.

விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், உதவி இயக்குநர் விஜயராகவன், கோட்டாட்சியர் பிரபு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் தயாநிதி பாண்டியன், தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன் ஒன்றிய பொருளாளர் பரிச்சமுத்து, கவுன்சிலர் ரெக்ஸ்லின் மற்றும் வக்கீல் பிரபாகரன், கபடி கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அளித்த பேட்டியில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், திமுகவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். கனிமொழி எம்.பியும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பேசியது மட்டுமின்றி அமைச்சர்கள் உள்பட அனைவரையும் தொடர்ந்து சந்தித்து வற்புறுத்தி வந்தார். அதன் அடிப்படையிலேயே அமையப்பெற்றுள்ளது விளம்பரத்தில் எதிர்பாராமல் சில தவறுகள் நடந்துள்ளது. ஆனால் மதத்தை வைத்து மத மோதல்களை உருவாக்கி அவர்கள் அரசியல் செய்வதைப் போல் நாங்கள் செய்யவில்லை. இந்தியாவை நேசிப்பவர்கள் நாங்கள் அரசு விழாவில் அரசின் திட்டங்கள் சாதனைகள் பற்றி பேசாமல் அரசு விழா மேடையாக மாற்றியது மட்டுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெயர்களை உச்சரிக்காமல் புறக்கணித்த அவர்களை இந்த நாட்டு மக்கள் தேர்தல் களத்தில் பிஜேபி யை புறக்கணித்து எங்களை அங்கீகரிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாக் கூட்டணி அமோக வெற்றிபெறும். பிரதமர் யார் என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார். விசைப்படகு தொழிலாளர்கள் சங்கத்தலைவர் சில்வஸ்டார் செயலாளர் ஜவஹர் உள்பட மீனவர்கள் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )