
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது- பிரதமரை தூண்டி விட்டால் எங்களை தூக்கில் போடுவார்களா?. நாடு கடத்துவார்களா? – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எல்லோருக்கும் அனைத்து நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகம் எதிரே நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திமுக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணைத் தலைவருமான ஏ.பி. ரமேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் சிவா ஆனந்தி வரவேற்று பேசினார். ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்,
திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது..
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வந்தார். ராக்கெட் ஏவுதளத்தை வரவேற்று ஒரு விளம்பரம் வெளியிட்டேன். அதை வடிவமைத்தவர் தவறு செய்துவிட்டார். அதை வைத்துக்கொண்டு பாரத பிரதமர் அரசியல் செய்கிறார். அரசியல் செய்ய வழியில்லாமல் வக்கத்து நடக்கிறார். நான் அண்ணாமலையிடம் சொல்கிறேன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்குங்கள் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என சவால் விட்டார். அண்ணாமலை பிரதமரை சீண்டி விடுகிறார். நீங்கள் சீண்டி விட்டால் எங்களை தூக்கில் போடுவார்களா?. நாடு கடத்துவார்களா? அது நடக்காது. மாநில அரசாங்கத்தை இல்லாது பொல்லாததெல்லாம் சொல்வது நீங்கள் ஒரு பிரதமர் தானா?. திமுகவை அழிக்க முடியுமா?. தொட்டு பார்க்க முடியுமா?. பிஜேபியில் யாராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?. நல்லது நடந்தால் அதை எதிர்த்து கொடி பிடிப்பவர்கள் தான் பாஜகவினர். நாங்கள் இந்து என்று சொல்லக்கூடிய பாஜக, இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ரூ.
300 கோடி மதிப்பில் மெகா திட்டப்பணிகள் நடக்கிறது. நீங்கள் சேகர்பாபுவை தொட்டுப் பார்க்க முடியுமா?..
எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச வேண்டியது இல்லை . இதோட அதிமுக கட்சி அவுட். தேர்தலுக்கு பின்பு அந்த கட்சி இருக்குமா என்பது சந்தேகம். ஓ.பி.எஸ். யார் என்று உங்களுக்கு தெரியும். நாம் எடுக்க வேண்டிய சபதம் என்னவென்றால் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வேண்டும் என அவர் பேசினார்.
செய்தியாளர் – சதீஷ்