
தூத்துக்குடி டூவிபுரத்தில் தின்னை பிரச்சாரம்- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் எனும் முன்னெடுப்பில் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் துண்டு பிரசுரம் மூலம் கொண்டு சேர்க்கும் தின்னை பிரச்சாரத்தை மாநகராட்சி பகுதியான டூவிபுரத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இல்லம் தோறும் அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் அதிர்ஷ்டமணி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன்,பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச்செயலாளர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

