
குறைகளை என்னிடம் சொல்லுங்கள், திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள்- மேயர் ஜெகன் பொியசாமி திமுகவினருக்கு அறிவுரை
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசனை படி மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 4,5,6,7,8,9,10,11,12,13,20,21, ஆகிய பகுதிகளில் உள்ள கவுன்சிலர்கள் வட்டச்செயலாளர்கள் வட்டப்பிரதிநிதிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போல்பேட்டை கீதாஹோட்டல் மைதானத்தில் மேயர் ெஜகன் பொியசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் பலருக்கு சென்றடையாத மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன. அப்போது பேசிய கவுன்சிலர் உள்படதிமுகவினர் தங்களது பகுதிகளில் வைத்த கோாிக்கைகளை நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றி தொிவித்தது மட்டுமின்றி செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கோாிக்கையாக தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
அனைவரது குறைகளையும் குறிப்பெடுத்துக் கொண்டு மேயர் ஜெகன் பொியசாமி பேசகையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் பதவியேற்ற காலத்தில் கொரானா என்ற கொடிய நோயிலிருந்து மக்களை பாதுகாத்து அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடின்றி நான்காயிரம் வீதம் வழங்கினார். அதன் பின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக செயல்பட்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உாிமைத்தொகை இலவச பேருந்து புதுமைப்பெண் திட்டம், இல்லம் தோறும் கல்வி, மருத்துவம், நான்முதல்வன், திறன் மேம்பாட்டு பயிற்சி, என பல சாதனைகளை செய்துள்ள முதலமைச்சர் மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கும் நிதி ஓதுக்கீடு செய்து பல்வேறு கட்டமைப்பு பணிகளை மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதின்படி கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் மக்களுக்கான பணிகளை செய்யாமல் இருந்து வந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெற்று பதியேற்ற பின் முறையாக பாராபட்சமின்றி அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை தேவையான கால்வாய், சாலை, மின்விளக்கு, மாசு இல்லாத, மாநகரை உருவாக்கும் வகையில் மரக்கன்று நடுதல் நெகிழிகளை தவிர்த்து மஞ்சள் பை உபயோகித்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு புறநகர் பகுதியாக இருக்க கூடிய சங்கரபோி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம், முள்ளக்காடு வரை கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி விரைவு படுத்தியுள்ளோம் அதிலும் குறிப்பாக தனசேகரன்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய பூங்காக்கள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் நடைபயிற்சியும் பல விளைாயட்டுகள் மூலம் பயனடையும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பழைய தூத்துக்குடி பகுதி விாிவாக்கம் செய்வதற்கு வழியில்லை. போக்குவரத்து நொிசல் இல்லாதபடி சாலைகளின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். புறநகர் பகுதிதான் விாிவான பகுதியாக அமையபெற்றுள்ளது. உப்பாத்துஓடை ரவுண்டானா முதல் முள்ளக்காடு வரை குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உங்களை நம்பிதான் நாங்கள் எங்களை நம்பிதான் நீங்கள் ஓவ்வொரு பகுதிகளிலும் இருக்கின்றவர்கள் முதலமைச்சாின் 34 மாத கால ஆட்சியின் சாதனைகளையும் இரண்டு ஆண்டுகால மாநகராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் தின்னை பிரச்சாரம் மூலம் இல்லம்தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் கடந்த தேர்தலில் கனிமொழி எம்.பி, பெற்ற வாக்குகளை விட மாநகராட்சி பகுதியில் கூடுதலான வாக்கு பெற்றுகொடுக்கும் அந்த வார்டு நிர்வாகிகளுக்கு பாிசுகள் வழங்கப்படும். தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சி இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்கும் நீங்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இருந்தால் அதை மறந்துவிட்டு பணிகளை மட்டும் செய்யுங்கள் நிறைவாக குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து கொடுக்க தயாராக வுள்ளேன். என்னை பயன்படுத்திகொள்ளுங்கள். என்று பேசினார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி சுகாதார குழ தலைவர் சுரேஷ்குமார், பணிக்குழ தலைவர் கீதாமுருகேசன், கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ஜெயசீலி, பவானி மார்ஷல், தெய்வேந்திரன், நாகேஸ்வாி, சுதா, அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், கற்பககனி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராஜாமணி, இசக்கிமுத்து, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் நிக்ேகாலாஸ் மணி, அந்தோணி, தொண்டரணி துணை அமைப்பாளா் ராமர், மாநகர அணி அமைப்பாளர் டேனி, துணை அமைப்பாளர்கள் சீதாலட்சுமி, அற்புதராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்டச்செயலாளர்கள் ரவிசந்திரன், முனியசாமி, மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், லிங்கராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்

